முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் விஷேட கூட்டம் ஒன்று நேற்றையதினம் (14) இடம்பெற்றுள்ளது
முல்லைத்தீவு கள்ளப்பாட்டு கிராமத்தில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்கத்தினரால் விஷேட கூட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
குறித்த ஒன்று கூடலில் புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த செவிப்புலனற்றோர் உறவினால் அவர்களுக்கான சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், உலருணவு பொதிகளும் அவரால் வழங்கப்பட்டதுடன், செவிப்புலனற்றோரின் நலன் சார்ந்த விடயங்களும், கலந்துரையாடப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.