அளம்பிலிலிருந்து குமுழமுனை செல்லும் பிரதான வீதியின் அருகே இருந்த ஒரு பாரிய மரம் ஒன்று இன்று (19.07.2024) அதிகாலை வீதிக்கு குறுக்கே விழுந்ததால் பல மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
அளம்பிலிலுள்ள 10 வது சிங்கரெஜிமன்ட் படையணியை சேர்ந்த இராணுவத்தினரால் துப்பரவு செய்யப்பட்டு பின்னர் போக்குவரத்து மீண்டும் சீர்செய்யப்பட்டிருந்தது.
மரங்களின் கிளைகள் அவ்வப்போது காற்றுக்கு முறிந்து விழுந்து கொண்டிருப்பதாகவும், பாரிய காற்று வீசும் போது மரங்களின் பெரிய கிளைகள் முறிந்து விழுமாயின் இப்பிரதான வீதியில் பயணம் செய்யும் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் தற்போது காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், இம்மரங்கள் முறிந்து விழுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த மரங்களை அகற்றுவதற்கு மற்றும் சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.