செம்மலை பழைய நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவத்தினை குழப்பும் முயற்சியில் பொலிஸார் .ஆலய நிர்வாகத்தினர் பொலிஸாருக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு – பழைய  செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்  இன்றையதினம்  சிறப்பாக இடம்பெற்றுவந்த வேளை  அதனை குழப்பும் முகமாக பாரிய  மீன் கூலர் ரகவாகனம் வரவழைக்கப்பட்டு ஆலயத்திற்கு மின் வழங்கும் வயர் அறுக்கப்பட்டு பொங்கல் உற்சவத்தினை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில்  நேற்றையதினம் பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து இன்றைய தினம் பொங்கல்  உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் மாலை நேரம் ஆலய வளாகத்திற்குள் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் கூளர்ரக வாகனம் ஒன்றினை பொலிஸார் உள்ளே அழைத்து குறித்த வாகனத்தினால் ஆலயத்திற்கு செல்லும் மின்சார வயர் அறுக்கப்பட்டதனால்  பொலிஸார் , பிக்கு மற்றும் ஆலய நிர்வாகத்தினருக்கிடைய முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் பொங்கல் உற்சவம் நடைபெற்ற வேளை திட்டமிட்டு குழப்பும் நோக்கோடு ஆலய வளாக பகுதிக்குள்  மீன் ஏற்றும் கூலர்ரக வாகனம் கொண்டுவரப்பட்டு  ஆலயத்திற்கு  மின் வழங்கும்  வயர் அறுத்து விடப்பட்டுள்ளது.இதனால் ஆலயத்தில் மின் தடை ஏற்பட்டிருந்தது. அத்தோடு  அறுத்துவிடப்பட்ட மின் வயறினால்  மின் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள்  ஆலய உற்சவத்தினை குழப்பும் நோக்கிலையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம் (24) இடம்பெறவிருந்த நிலையில் நேற்றையதினம்(23) ஆலயத்திற்கு சென்ற பொலிஸ், இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் ஆலய பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது. தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news