வடமாகாண கல்வி திணைக்களத்தால் மாகாண பாடசாலைகளுக்கு இடையேயான 21,22/7/2024 கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடத்தப்பட கராத்தே போட்டியில் முல்/றெட்பானா, பாரதிபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் பாரதி மகா வித்தியாலயம் 18வயது பிரிவில் சு. நிலக்சன் 1ம் (தங்க பதக்கம்). இடத்தினையும், 20வயது பிரிவில் ர. மதுமிதா 1ம் இடத்தினையும் (தங்க பதக்கம்) பெற்று பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் இவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அணி கராத்தே ஆசிரியருமான சென்சேய் ரதிதரன் ஆசிரியருக்கும் பாடசாலையில் பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால் மதிப்பளிக்களிக்கப்பட்டது.