வன்னியில் அதிக வாக்குகளை பெற்ற சயித்பி்ரேமதாச!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் ஐக்கியமக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சயித் பிரேமதாச அதிகளவான வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
ஐனாதிபதித்தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் நேற்றயதினம் மாலை ஆரம்பமாகி இடம்பெற்றுவந்தது.
அந்தவகையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் சயித் பிரேமதாச 95422 வாக்குகளையும் ரணில்விக்கிரமசிங்க52573, வாக்குகளையும், அரியநேத்திரன்36377 வாக்குகளையும், அநுரகுமாரதிசாநாயக்க 21412 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
குறிப்பாக வன்னி தேர்தல்மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல்தொகுதியில் சயித்பிரேமதாச 28301 வாக்குளையும், அரியநேத்திரன் 12810 வாக்ககுளையும், ரணில் விக்கிரசிங்க7117 வாக்குகளையும்,அநுரகுமாரதிசாநாயக்க 3453 வாக்குளையும் பெற்றுள்ளனர்
 வன்னி தேர்தல்மாவட்டத்தின் வவுனியா தேர்தல்தொகுதியில் சயித்பிரேமதாச 33731 வாக்ககுளையும், அரியநேத்திரன் 11650 வாக்ககுளையும், ரணில் விக்கிரசிங்க24018 வாக்குகளையும்,அநுரகுமாரதிசாநாயக்க11591 வாக்குளையும் பெற்றுள்ளனர்.
வன்னி தேர்தல்மாவட்டத்தின் மன்னார் தேர்தல்தொகுதியில் சயித்பிரேமதாச 28491 வாக்ககுளையும், அரியநேத்திரன் 10757 வாக்ககுளையும், ரணில் விக்கிரசிங்க17181 வாக்குகளையும்,அநுரகுமாரதிசாநாயக்க 4276 வாக்குளையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை வன்னிமாவட்டத்தில் 306081 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் 226650 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தது. அவற்றில்9381 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 217269 வாக்குகள் செல்லுபடியானவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Latest news

Related news