முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 57 மாணவர்கள் சித்தி.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி 57 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கனகையா மதியழகன் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தபட்டிருக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இவ்வருடம் 107 மாணவர்கள் க.பொ.த சாதரண பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அதில் ஒரு மாணவர் 9 ஏ சித்திகளையும், மூன்று மாணவர்கள் 8ஏ ,பீ சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8ஏ,பீ சித்திகளையும் பெற்றதோடு ஏனைய 51 மாணவர்களும் உயர்தரத்திற்கு தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்து தசாப்தகாலம் ஆகியும் குறித்த மாவட்டம் வறுமைக்குட்பட்ட மாவட்டமாக காணப்படுகின்றபோதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக திகழ்வதும் குறிப்பிடதக்கது.

Latest news

Related news