முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் சித்தி

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில்  ஏழு மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் சித்தி பெற்று உள்ளதாக பாடசாலையின் அதிபர்
எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ர உயர்தர வித்தியாலயத்தில் 18 மாணவர்கள்  க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அவர்களில் 7 மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.
குறித்த கிராமம் போரினால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு  இருந்தாலும்  அக்கிராமத்தில் உள்ள  மாணவர்கள்  மிக சிரமத்தின் மத்தியிலும்  கல்வி கற்று  க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news