அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான தைக்கொண்டோ போட்டியில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 28,29,30/09/2024 திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதுபிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவி டிவொன்சி வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சென்சை தேசிந்தனின் பயற்றுவிப்பில் குறித்த போட்டியில் கலந்து கொண்ட மாணவி
தற்பொழுது வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A பெற்று சித்தியடைந்திருந்தமையும் குறிப்பிடதக்கது.