மாகாண மட்ட சித்திரம் வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி தரம் 01 இல் கல்வி கற்கும் மயூரன் ஆருதி என்ற மாணவி தங்கம்வென்று பாடசாலைக்கும் , முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண மட்ட ஆரம்ப பிரிவினருக்கான சித்திரம் வரைதல் போட்டி நேற்றையதினம் (23.10.2024) யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றிருந்தது. குறித்த ஆரம்ப பிரிவினருக்கிடையிலான போட்டியில் குமுழமுனை மகாவித்தியாலய மாணவி பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இம் மாணவியினை ஊக்கப்படுத்திய திருமதி ஜெயசீலன் விமலாதேவி ஆசிரியரையும், தங்கம் வென்ற மாணவியையும் பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.