Electronic Voting Mechine” கண்டுபிடிப்பு – மாணவனை தேடிசென்று வாழ்த்திய சமூகசேவகர் சந்திரகுமார் கண்ணன்

புதிய நுட்ப முறையிலான “Electronic Voting Mechine” ஒன்றினை கண்டுபிடித்து வவுனியா மாணவர் ஒருவர் சாதனைபடைத்துள்ளார்.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு பல மில்லியன் ரூபாய் பணத்தினை மீதப்படுத்தப்படும் வகையில், வவுனியா விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த ஆண்டு 9 இல் கல்வி பயிலும் மாணவன் ஸ்ரீதேவன் கபிலாஷ் என்ற மாணவன் புதிய நுட்ப முறையிலான “Electronic Voting Mechine” ஒன்றினை உருவாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து புதிய கண்டுபிடிப்பாளரான மாணவன் கபிலாஷ் ஐயும், அவரது பெற்றோரையும் தமிழ் விருட்சத்தின் ஸ்தாபகரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான செ.சந்திரகுமார் (கண்ணன்) அவர்கள் வீடு தேடிச்சென்று நேரில் வாழ்த்திகுறித்த மாணவனது கண்டுபிடிப்பு என தமிழர்களையே தலை நிமிர வைக்கின்றளவுக்கு பெருமிதம் அடைய வேண்டிய விடயம் என்றும்,

ஆனாலும் இந்த விடயத்தை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்பது மனவேதனையளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

Latest news

Related news