முல்லைத்தீவு – உடுப்புக்குளத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் மலேசியாவில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31.10.2024 திகதி பொலிஸாருக்கு பயந்து மலேசியாவில் உள்ள மேம்பால வீதியொன்றில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார்.
இராசரத்தினம் கஜேந்திரன்(கஜன்) என்று அழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கிரியைகள்
மலேசியாவில் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன் அங்கு பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நிலையில், அதில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக மேம்பால வீதி ஒன்றில் இருந்து குதித்து கீழ் நின்ற காரின் மேல் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தினை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெற்றோர்கள், உறவினர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு தற்போது உடுப்புக்குளத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் 11.11.2024 அன்று இடம்பெறும் என உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.