முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் , மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த ஊடக சந்திப்பின்போது,
நாளையதினம் இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது.முல்லைத்தீ வு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதிபெற்ற 86869 பேர் 137 வாக்களிப்பு நிலையங்களில் நாளையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.
இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் (14.11.2024) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெறும்.
முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்திருக்கின்றது. இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றார்கள்.
நாளை மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெண்ணும் எட்டு வலயத்திற்கு வாக்கு பெட்டடிகள் எடுத்து வரப்படும் என மேலும் தெரிவித்தார்