கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பலி!

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் 8வயது சிறுவன் கிணற்றினுள் தவறிவீழ்ந்து சாவடைந்துள்ளான்.

குறித்த சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்…..

 

நேற்றயதினம் குறித்த சிறுவன் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ளியுள்ளான். இதன்போது தவறி உள்ளே வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த க.டிலக்சன் என்ற 8 வயதான சிறுவனே இவ்வாறு சாவடைந்துள்ளான். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

 

Latest news

Related news