முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் நந்திக்கடல் நீர் ஏரியும் சாலை கடல் நீரேரியும் கடலுடன் வெட்டிவிடப்பட்டுள்ளன.
அண்மை நாள்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தால், அந்நீர் ஏரிகளின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன், வட்டுவாகல் பாலத்துக்கு மேல் ஒரு அடிவரை நீர் மூடிக் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் மாலை இடம்பெற்ற கூட்ட தீர்மானத்திற்கமைய இன்று (25.11.2024) மாலை 5.30 மணியளவில் பாரம்பரிய முறைப்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு நந்திக்கடல் நீர் ஏரி வெட்டப்பட்டு, பெருங்கடலுடன் சங்கமிக்க செய்யப்பட்டுள்ளது.
கிராம மக்கள், கடற்படையினர், இராணுவத்தினர், அனர்த்த முகாமைத்துவத்தினர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.