கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முல்லை விழிப்பு ஒன்றியமானது
சுவிஸ் வாழ் முல்லைத்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களின் நிதியனுசரணையில் ஒழுங்குபடுத்தலுடன் 411 பயனாளிகளுக்கு வெள்ள நிவாரண பணி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரண பணியானது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருந்த பயனாளிகளுக்கு கிராம அலுவலர்களின் தெரிவுகளுக்கமைய
சிலாவத்தை கிராம அலுவலர் பிரிவில் 06 , கள்ளப்பாடு தெற்கில் 04 , கள்ளப்பாடு வடக்கு 01 , வண்ணாங்குளம் 03 , மணல் குடியிருப்பு05 ,கோயிற்குடியிருப்பு 05 , செல்வபுரம்12, முள்ளிவாய்க்கால் கிழக்கு 03 ,முள்ளிவாய்க்கால் மேற்கு 48 , சிலாவத்தை தெற்கு 30 பயனாளிகளுமாக மொத்தமாக 117 பயனாளிகளுக்கு ரூபா 5000 பெறுமதியான உலருணவு பொருட்கள் நேற்றையதினம் (01) வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் கொக்குளாய் கிழக்கு, மேற்கு கிராம அலுவலர் , கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் கோரிக்கைக்கு அமைவாக கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொக்குளாய் மேற்கு 189, காெக்குளாய் கிழக்கு 105 பயனாளிகளாக 294 பயனாளிகளுக்கு 2800 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பணியை சுவிஸ்வாழ் பழைய மாணவர்களின் நெறிப்படுத்தலில், கள்ளப்பாடு இளைஞர்கள், இணைந்து குறித்த நிவாரணப்பணியை வழங்கியிருந்தார்கள்.