முல்லைத்தீவு மாவட்ட கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முல்லைப் பொன் புத்திசிகாமணி எழுதிய ” நான் பார்த்த நந்திக்கடல் நூல் வெளியீட்டு விழா இன்றையதினம் (13) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் நூலையும் வெளியிட்டு வைத்தார். வெளியீட்டு உரையினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்கள் நிகழ்த்தினார்.
முல்லைத்தீவு மாவட்ட மூத்த எழுத்தாளர் நிலக்கிளி நாவல் புகழ் பாலமனோகரன் அவர்கள் நூல் சார்ந்த திறனாய்வினை முன்வைத்தார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் மாவட்ட செயலக ஓய்வுநிலை பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், ஒட்டுசுட்டான் முதல்வர் நாகேந்திரராசா, முன்னாள் அதிபர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.