முல்லைத்தீவு மாவட்டம் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள சின்னாறு பொழுதுபோக்கு பூங்கா இன்றையதினம் (31.12.2024) வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் காலை திறந்து வைக்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் நிதியீட்டத்தின் மூலம் ரூபாய் 11.68 மில்லியன் செலவில் 2018 நிர்மாணிக்கப்பட்ட இப் பொழுதுபோக்கு பூங்கா வடக்குமாகாண விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டு இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் உலக மண் தினத்தினை முன்னிட்டு திறந்து வைக்கப்பட்டு கரைதுறைப்பற்று பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் நடைமுறைப்படுத்தியிருந்தது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஆள்வார்ப்பிள்ளை சிறி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபான், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜசிந்தன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி இராசயோகினி ஜெயக்குமார், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.