மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயன் சிறுவர் இல்லத்திற்கு சிறுமி ஒருவரின் பிறந்த தினத்தில் நேற்றையதினம் (11.01.2025) மதிய உணவு வழங்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் தனது 13 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் ரி.டினோசா என்பவரின் பிறந்த நாளில் சிறுவர்களிற்கு உணவு வழங்கும் நோக்கில் சமூகப் செயற்பாட்டாளர் ஞா.யூட்சன் அவர்களினால் நல்லாயன் சிறுவர் இல்லத்திற்கு நேரடியாக சென்று சிறுவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்தச் செயல், மனிதநேயம் மற்றும் சமூக கடமையை உணர்ந்து, பிறரின் நலனுக்காக செயல்படும் அத்தகைய பணிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறது.