பொங்கலை பொங்க பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாளுக்கான இந்த உதவி 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பார்த்தீபனின் ஒழுங்குபடுத்தலில்  சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சனால் முன்பள்ளி ஆசிரியர்கள், மாவீரரின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் குடும்பத்திற்கு இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news