தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (13.01.2025) முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ராஜூ அவர்களின் நிதிப்பங்களிப்பில் இன்றையதினம் முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட குடும்பங்களுக்கே பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாள் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் 25 குடும்பங்களுக்கு சமூக செயற்பாட்டாளர் ஞா.ஜூட்சனின் ஒழுங்குபடுத்தலில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.