விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர். விரைந்து உயிரை காப்பாற்றிய புதுக்குடியிருப்பு பொலிஸார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் வாய்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்ந்த நிலையில் இன்று (16.01.2025) இரவு 7 மணியளவில் கணவன் தூக்கு போட வீட்டு அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். இதனை அவதானித்த மனைவி அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தொலைபேசியில் தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் விரைந்து வீட்டு அறைக்கதவினை உடைத்து தூக்கில் தொங்கிய குடும்பஸ்தரை மீட்டெடுத்துள்ளனர்

மீட்கப்பட்ட குடும்பஸ்தர் உடையார்கட்டு மூங்கிலாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விசுவமடு ரெட்பானா பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்விபரித முடிவினை எடுத்துள்ளார். எனினும் புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விரைவான நடவடிக்கையினால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது பாராட்டத்தக்க விடயம்.

Latest news

Related news