உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள், குடும்பஸ்தர் பலி

சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்தி விட்டு உழவியந்திரத்துடன் சாரதி தப்பிச்சென்ற நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் (29.01.2025) இரவு சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர்சம்பவ இடத்தில் பலியானதுடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest news

Related news