இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முள்ளியவளையில் ரைற்றன் ஸ்போட்சினரால் மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்று இன்றையதினம் (04.02.2025) காலை ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றிருந்தது.
அணிக்கு 11 பேர் கொண்ட 6 பந்து பரிமாற்றங்களை கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியானது முள்ளியவளை வித்யா விளையாட்டு கழக மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்ற போட்டியில் 10 அணிகள் போட்டியில் போட்டியிட்டிருந்தன .
முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. அமரசிங்க, முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரதுங்க , மற்றும் பொலிஸார், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.