ஐசிசி செம்பியன்சிப் 2025 இன் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளது.