புதுக்குடியிருப்பில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீடுடைத்து தங்க நகைகள் திருட்டு. இளைஞன் கைது.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை  பகுதியில்  பட்டப்பகலில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில்  இளைஞர் ஒருவர்  நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் ஆசிரியர் ஒருவரின்  வீட்டினை  உடைத்து 6,10,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள்  திருடப்பட்ட சம்பவம் ஒன்று  கடந்த 25.02.2025 அன்று இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து குறித்த சம்பவம்  தொடர்பாக புதுக்குடியிருப்பு  பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டதனையடுத்தே  நேற்றையதினம் (12.03.2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய  சந்தேகநபர்  ஏறாவூர், மட்டக்களப்பில் வைத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி (45555) அஜித் தலைமையில் பொலிஸ் கொஸ்தாபல்களான (91451) குமார, (105152) கவிராஜ், (102757) அர்ஜன் ஆகிய பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 24 வயதுடைய  இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரினை  நேற்றையதினம் (12.03.2025) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 25.03.2025 வரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest news

Related news