மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது.
குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை பெற்றதுடன் தொடர்ந்து 6 வருடமாக 1ஆம் இடத்தினையும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
குறித்த போட்டியில் முல்லைத்தீவு 5 தங்கம், 3 வெள்ளி பதக்கத்தினை பெற்று, 1ஆம் இடத்தினையும், யாழ்ப்பாண மாவட்டம் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கத்தினை பெற்று 2ம் இடத்தினையும், வவுனியா மாவட்டம் 2 தங்கம், 2 வெள்ளி , 2 வெண்கலம் பதக்கத்தினை பெற்று 3ஆம் இடத்தினையும் பெற்றிருந்ததோடு, பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தினர் 10 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை தமதாக்கியிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட வீரர்களுக்கான பயிற்சியை முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுனரும், வரலாற்று ஆசிரியருமான பி. ஜெயதர்சன் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.