மாங்குளம் பகுதியில் உணவகங்கள் மீது திடீர் சோதனை! அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். மூடப்பட்ட உணவகம்

மாங்குளம் பகுதிக்குட்பட்ட உணவகங்கள் மீது திடீரென சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம் ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான Dr.பகீரதன், Dr.சஞ்சீவன் ஆகியோர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நதிருசன் ,லோஜிதன், டிலக்சன் ஆகியோர்களினால் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த நடவடிக்கையின் போது மாங்குள பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மூடப்பட்டதுடன். மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் இனங்காணப்பட்டு உடனடியாக அழிப்பு செய்யப்பட்டது. மூடப்பட்ட உணவகங்களில் இனங்காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை10 நாட்களில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமல் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news