முல்லைத்தீவில் பிற்பகல் 4 மணிவரை 61.32% வீத வாக்களிப்பு

முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பிற்பகல் 4மணிவரை 53,839 (61.32%) சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06.05) காலை ஆரம்பமாகிய நிலையில் முல்லைத்தீவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.
137 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 87,800, தபால் மூலம் பதிவான வாக்குகள், 3,769 + வாக்களிப்பு நிலையம் மூலம் பதிவான வாக்குகள் 50,070 மொத்தம் 53,839 (61.32%) பொலிசாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று நிறைவடைந்திருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற 137 வாக்களிப்பு நிலையங்களில் இருக்கின்ற வாக்குப்பெட்டிகள் 41 வட்டாரங்களில் அமைக்கப்பட்டிருக்கின்ற வாக்கு எண்ணும் நிலையங்களிற்கு எடுத்து செல்லப்பட்டு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெறும். அதன் பின்னர் இறுதி முடிவுகள் மாவட்ட செயலகத்தில் அறிவிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

Latest news

Related news