சர்வதேச யோகா தினம் பாலன் அறக்கட்டளையின் திரு முல்லை யோகா நிலையத்தில் நேற்றையதினம் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
விருந்தினர்களை வரவேற்றல், மங்கலவிளக்கேற்றல், இறை வணக்கம் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் யோகா, சிலம்பம், வர்மக்கலை, கராத்தே ஆகியவற்றின் மாஸ்டர் ஜெயம் ஜெகன் அவர்களது நெறியாள்கையில் மாணவர்களது விசேட யோகா ஆற்றுகை மற்றும் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாடகம் என்பன இடம்பெற்றிருந்தது.
பாலன் அறக்கட்டளையின் தலைவர் திருவாளர். சி. பாலசுப்பிரமணியம் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு நிலை ஆசிரியர் செல்வி திருஞானசம்பந்தர் தயாநிதி அவர்களும் சிறப்பு அதிதியாக தேவிபுரம் கிராம அலுவலர் தி.உமாஜிதன் மற்றும் கௌரவ விருந்தினராக ஆசிரியர் கௌரி யோகேஸ்வரன் ,பாலன் அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
நீண்ட காலமாக யோகா ஆசிரியராக பணியாற்றி வரும் திருமதி சுபா நகுலானந்தம்-கனடா அவர்களது அயராத முயற்சியின் பயனாக அமையப்பெற்ற திரு முல்லை யோகா நிலையம் ஆரம்ப காலம் முதல் இன்று வரை அவரது யோகாப் பயிற்சியின் ஊடாக மாணவர்கள் வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.