வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
குறித்த போட்டியில் வடக்கு மாகாண பாடசாலைகள் பங்குபற்றியிருந்தது. அதில் வடமாகாண பாடசாலைகளில் மு/ வித்தியானந்த கல்லூரி( தேசிய பாடசாலை) மல்யுதத்த போட்டியில் ஆண்கள் பிரிவினர் முதலாம் இடத்தையும், பெண்கள் பிரிவினர் இரண்டாம் இடத்தையும் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
மு/ வித்தியானந்த கல்லூரி(தேசிய பாடசாலை) மாணவர்கள் 9தங்கப்பதக்கம் , 9 வெள்ளிப் பதக்கம் , 11வெண்கலப் பதக்கம் என 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மல்யுத்த(wrestling) போட்டியில் கோதிசன் , றஜிந்தன் ,எழிலன் , விபுர்ஜன் , தர்சா ,புவியரசி,. குயின்சி ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும் சங்கீர்த்தனன் ,அபினாஸ் , காயத்ரி , பவித்திரா ,பவின்சா ஆகியோர் வெள்ளி பதக்கத்தினையும் தர்சிகன், சிறிதனோசன் ,கோபிசன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினையும் தமதாக்கி கொண்டிருந்தனர்.
Judo(ஜூடோ) போட்டியில் வித்தியானந்த பாடசாலை மாணவர்களான அபினாஸ், குயின்சி ஆகியோர் தங்கப் பதக்கத்தினையும், தர்சா , புவியரசி,விபுர்ஜன் ,முகிலன் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினையும் ரிபிசன் , சிறிதனோசன் ,கோபிசன் நிதர்சன்,பிந்துஜன் ,பவிது, ஜெனுகா ,பவின்சா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்று பாடசாலைக்கும் முல்லைத்தீவு மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இம் மாணவர்கள் சாதனை புரிய ஊக்குவிப்பும், ஆதரவும் வழங்கிய அதிபர், பாடசாலை நிர்வாகம், மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் சங்கம், வலயக் கல்வி அலுவலகம் மற்றும் உபகரணங்கள், பயிற்சி பெற இடம் (உள்ளக விளையாட்டு அரங்கு) ஆலோசனைகள் என பல்வேறு வழிகளில் உதவிகளைச் செய்த முல்லை மாவட்ட விளையாட்டுப் பிரிவு, மேலும் பயிற்சிகளை மேற்கொள்ளும் போதும் மற்றும் போட்டி நேரங்களிலும் பக்கபலமாக இருந்த லோகராஜா சகீதரசீலன், மதீசன், கஜந், வினோஜன் ஆகியோர்க்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்திருப்பதும் குறிப்பிடதக்கது.