வலுவிழப்புக்குள்ளானவர்களிற்கு எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் 

வலுவவிழப்புக்குள்ளான நபர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

வலுவிழப்புக்குள்ளான நபர்களின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாக பிரித்தானியா அறம் Intiative அமைப்பினருக்கும், புதியவாழ்வு நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.

புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் சு.விஜயலாதன் தலமையில் ஆரம்பமான அறம் Intiative அமைப்பினர், புதியவாழ்வு நிறுவனத்தினருக்குமான கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அங்கிருக்கின்ற வலுவிழப்புக்கு உள்ளான நபர்களுடைய உடல் உள நலன் தொடர்பாகவும், வலுவிழந்த நபர்களுக்கு தாெழில்நுட்ப ரீதியாக எவ்வாறான தொழில்வாய்ப்புக்களை வழங்கமுடியும் என்பது தாெடர்பாகவும், இளைஞர்களுக்கான தாெழில்வாய்ப்பு தாெடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் புதியவாழ்வு நிறுவனத்தின் தலைவர் சு.துஸ்யந்தன், உப தலைவர் ப.தர்சினி, உப செயலாளர் செ.கருணாகரன் இயக்குனர்சபை உறுப்பினர்கள் நிர்வாக உறுப்பினர்கள், பிரித்தானியா அறம் Intiative அமைப்பினர், வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் உபதலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவினர், மற்றும் சமூக நலன்விரும்பிகளும் , மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Latest news

Related news