முல்லைத்தீவில் பாடசாலைகளிற்கு கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வுடன் கூடிய குப்பைத்தொட்டி நிறுவும் நிகழ்வு

கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய குப்பைத்தொட்டிகள் நிறுவும் நிகழ்வு நேற்றையதினம் முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகளில் இ்டம்பெற்றிருந்தது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு முள்ளியவளை மேற்கில் இயங்கி வரும் ஈகிள் சிறுவர் கழகம் மற்றும் நீராவிப்பிட்டி மேற்கில் இயங்கி வரும் முல்லை மலர் சிறுவர் கழகம் இணைந்து World Vision முல்லைத்தீவு பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ESCA வேலைத்திட்டத்தின் முகாமைத்துவத்துடன் கூடிய குப்பைத்தொட்டிகள் வழங்கும் நிகழ்வுகலைமகள் மகா வித்தியாலயம், நீராவிப்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும்நேற்றையதினம் (09) இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட சுற்றுப்புற சூழல் அதிகாரி, முல்லைத்தீவு வலயக் கல்வி உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர், மற்றும் வேள்விஷன் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து் கொண்டிருந்தனர்.

Latest news

Related news