விசர் நாய்கடி மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்குடனும், பெண்நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை நிகழ்வு இன்றையதினம் (14.10.2025) புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் தவிசாளர் வே.கரிகாலனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை வீடுகளில் வளர்க்கப்படும் பெண்நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்களுக்கு இலவச கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 16ம் திகதி உடையார்கட்டு உப அலுவலகத்திலும், 21ம் திகதி ஒட்டுசுட்டான் உப அலுவலகத்திலும், 23ம் திகதி ஒலுமடு உப அலுவலகத்திலும் பெண்நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை இடம்பெறவுள்ளது.
இந்த நடவடிக்கை, பிரதேசத்தில் விசர் நாய்களின் பெருக்கத்தைக் குறைத்து, மக்களின் பாதுகாப்பையும் சாலை விபத்துக்களையும் தவிர்க்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்றது.