தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாளுக்கான இந்த உதவி 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இறைபதம் அடைந்த பொன்னம்பலம் கனகரத்தினம், கனகரத்தினம் கமலாம்பிகா ஞாபகார்த்தமாக அவர்களின் பிள்ளைகளினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு அரிசி,பானை, பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.


