பிரித்தானிய பாராளுமன்றத்தில் கடந்த 13.01.2026 அன்றே தைப்பொங்கல் சிறப்பான முறையில் பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது.

குறித்த விழாவில் திருமதி மேகலா பரதன் அவர்களின் நெறியாள்கையில் பரதகலாலய மாணவர்களும் முழவம் கலையகத்தில் இசை பயிலும் மாணவர்களுமான, செல்வி. அக்ஷரா பரதன்,சபர்ணா தவேஸ்வரன்,அத்யா ஶ்ரீஸ்கந்தரஜா,சஞ்சனா பரதன் ஆகியோர் அவையோர் நிறைந்த பாராளுமன்றச் சபையில் தம் நடன ஆற்றுகையை நிகழ்த்தியிருந்தார்கள்
குறித்த பொங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக இந்திய இசைக்கலைஞன் திரு.லிடியன் நாதஸ்வரம் அவர்களும் ஈழத்தின் பாடகர் திரு.வாகீசன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

ஆற்றுகையளித்த மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியருக்கும் வாழ்த்துகளை கூறிக்கொள்வதோடு எம் தமிழர் கலை கலாசாரங்களை அங்கீகரித்து இவ் வாய்ப்பை வழங்கிய பிரித்தானிய அதிகாரிகள் அனைவருக்கும் எம் முழவம் கலையகம் சார்ந்த நன்றியறிதல்களைக் கூறிக்கொள்கிறோம் என முழவம் கலையகத்தினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.


