கிளிநொச்சி பூநகரி பிரதேச சபை மண்டபத்தில், இளைஞர் யுவதிகளுக்கான மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான செயலமர்வு நேற்று (19.03.2026) இடம்பெற்றது.

மனிதாபிமான அபிவிருத்திக்கான அமைப்பு (Humanitarian Development Organization – HDO) ஏற்பாடு செய்து
சக கல்வியாளர்களால்- (peer educators) நடாத்தப்பட்ட இச்செயலமர்வில், பூநகரி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் கலந்து கொண்டிருந்தார்.

பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுமார் 30 இளைஞர் மற்றும் யுவதிகள் இதில் கலந்து கொண்டு, மதச் சுதந்திரம், பரஸ்பர மதிப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அறிவு பெற்றனர்.
இச்செயலமர்வு, இளைஞர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


