திருமணமாகி 30 நாளில் கணவனை போட்டுத்தாக்கிய புதுப்பெண்!

இந்தியாவில் திருமணமாகி 30 நாட்களில் கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை போலிசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் புனே பகுதியை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா, டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது, திருமணம் முடிந்த கையோடு கோவில் கோவிலாக சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று பிரதி ஷீர்டி கோயிலுக்கு சென்றுள்ளனர், அங்கிருந்து குடும்பத்திற்கு சொந்தமான தோட்டம் இருப்பதாக கூறி அங்கிதா, சுராஜை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் சில மணிநேரங்களில் தந்தையை தொடர்பு கொண்டு அங்கிதா, தோட்டத்தில் இருந்த போது கொள்ளையர்கள் தாக்க வந்ததாகவும், அதில் சுராஜ் கொலை செய்யப்பட்டதாகவும் பதற்றத்துடன் பேசியுள்ளார்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அங்கிதாவின் தந்தை, இருவீட்டாரையும் அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

விசாரித்ததில் தான் வெளியே சென்றிருந்த வேளை, சுராஜை மர்ம நபர்கள் தாக்கி கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

அவர்கள் எப்படி இருந்தனர்? எந்நேரத்தில் இது நடந்தது? நீங்கள் எப்போது வந்தீர்கள்? என பல கேள்விகளை பொலிசார் கேட்க அங்கிதா சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பொலிசார் அங்கிதாவிடம் மேலும் விசாரித்ததில், அவரே குற்றவாளி என தெரியவந்தது.

மேலும், திருமணமான சில நாட்களிலேயே சுராஜை தனக்கு பிடிக்காமல் போனதால் திட்டம் போட்டு கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கிதாவை கைது செய்த பொலிசார், கொலைக்கு உதவியர்கள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Latest news

Related news