அண்மையில் 200க்கும் அதிகமான பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்த போதும், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி தடை நீக்கப்படாமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அகில இலங்கை மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கம் இதுதொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
புதிதாக அனுமதிக்கப்பட்ட இறக்குமதி பண்டங்களின் பட்டியல் படி, உயர் தொழில்நுட்பத்திலான தொலைக்காட்சி பெட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறான தொலைக்காட்சி பெட்டிகள் 1000 டொலர்கள் வரையில் கிரயமாவதுடன், அவை உள்நாட்டில் 700,000 ரூபாய் முதல் 1,000,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் 110 சீசீ கொண்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஒன்று 650 டொலர்கள் வரையிலும், முச்சக்கர வண்டியொன்று 1300 டொலர்கள் வரையிலும் கிரயமாகின்ற போதும், அதற்கு இறக்குமதி அனுமதி வழங்கப்படாமை அநீதியானது என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.