முல்லைத்தீவில் கோர விபத்து: ஒருவர் மரணம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக வாகனம் ஒன்று மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதம்

இதன்போது இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் அதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்துள்ளது எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Latest news

Related news