கார்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் தலைவராக நியமிக்குமாறு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணியின் சகலதுறை வீரராக விளங்கும் கார்த்திக் பாண்டியா ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் 50 பந்து பரிமாற்றங்களை கொண்ட உலக கிண்ண தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைவராக கார்த்திக் பாண்டியாவை நியமிக்கவேண்டுமென ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
புதிய அணித்தலைவர்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 50 பந்து பரிமாற்றங்களை உலக கிண்ண தொடர் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கு பின்னரே புதிய அணித்தலைவரை நியமிக்கவேண்டும் என ரவி சாஸ்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐபில் போட்டியில் கார்த்திக் பாண்டியா தலைமை தாங்கிய குஜராத் கிங்ஸ் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.