2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை (911,689) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
7 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இலங்கையில் இரட்டைக் குடியுரிமை
2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை (911,689) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்ட ஆண்டாக, 2022ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை (911,689) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மூன்று மடங்கு அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னொருபோதும் இல்லாதவகையில் இலங்கையின் பொருளாதாரம் கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்ததோடு, வங்குரோத்தடைந்த நாடாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கையர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதனால், கடந்த ஆண்டு கடவுச்சீட்டுகளுக்கு (Passport) அதிகளவான கேள்விகள் நிலவியதால் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தைக் காட்டிலும் அதிகளவான வருமானத்தை இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றிருக்கிறது.
கடந்த ஆண்டு மாத்திரம் 23.8 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கியமான தகவல்களை சுருக்கமாக பார்க்கலாம்.
249 இராஜதந்திர கடவுச்சீட்டுகள்
கடந்த வருடம் மாத்திரம் 249 இராஜதந்திர (diplomatic passport) கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
223 வெளிநாட்டவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு கடந்த வருடம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு, பாகிஸ்தானிலிருந்து வந்த 84 பேரும், இந்தியாவிலிருந்து வந்த 70 பேரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய 501 வெளிநாட்டவர்கள் கடந்த வருடம் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 401 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.