முல்லைத்தீவில் கரும்புலிகள் தினம் சிறப்புற அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு- தேவிபுரம் பகுதியில் கரும்புலிகளின் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் பொது இடங்களில் வைத்து கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வதற்கு பொலிஸார் மற்றும் புலானாய்வாளர்களால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இதனால் இன்றையதினம் (07.05.2023) தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் முல்லை ஈசனின் இல்லத்தில் நினைவுகூறப்பட்டுள்ளது.

முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கரும்புலிகளின் பொது திருவுருவப்படம் வைக்கப்பட்டு படத்திற்கான பொதுச்சுடரினை தாயக விடுதலைப்போரில் நான்கு பிள்ளைகளை கொடுத்து அதில் ஓருபிள்ளை கரும்புலியாக மண்ணுக்கு வித்தான பிள்ளைகளை பெற்றெடுத்த தாயாரான புஸ்பராணி ஏற்றிவைத்துள்ளார்.

தொடர்ந்து பொது திருவுருவப்படத்திற்கான சுடர்களை மூன்று மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றியதை தொடர்ந்து கரும்புலிகளின் பொது படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் நினைவுரைகளை தொடர்ந்து சிறப்புரையினை முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நிகழ்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கரும்புலிகள் நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் கரும்புலிகள் நினைவு சுமந்து தென்னங்கன்றுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

து.ரவிகரன் பேசும்போது அந்நிய ஆதிக்கத்திற்குள் இருந்துகொண்டு நாங்கள் கரும்புலிகளை நினைவிற்கொள்கின்றோம் என்றால் அது எங்கள் உணர்வு.

அந்த உணர்வுடன் எங்கள் நிலம் காக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இன்றும் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

கரும்புலிகள் நாள் மதிக்கவேண்டியது பெறுமதியான நாள் எங்கள் வீரத்தினை உலகிற்கு காட்டியநாள் என தெரிவித்துள்ளார்.

Latest news

Related news