இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கை நடுவர் மன்றத்துக்கு (ஜூரி) பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிட்னி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி:20 உலகக் கிண்ணப் போட்டியின் போது சிட்னியில் யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் 2022 நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கை நடுவர் மன்றத்துக்கு (ஜூரி) பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிட்னி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு வழக்கறிஞர் தனுஷ்க குணதிலக்க மீதான மூன்று குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்ற பின்னர், 32 வயதான அவர், அனுமதி இல்லாமல் உடலுறவு கொண்ட ஒரு குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.
அவர் வெள்ளிக்கிழமை சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.