கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு யாழ் நிலா தொடருந்து சேவை ஆரம்பம்

 

கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா’ எனும் அதி சொகுசு புதிய தொடருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த தொடருந்து சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது  தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, வார இறுதி நாட்களில் செயற்படவுள்ள இந்த தொடருந்து சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து  நிலையத்தை சென்றடையவுள்ளயது.

டிக்கெட்டுகள் முன்கூட்டியே முன்பதிவு

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை தொடருந்து நிலையத்தை வந்தடையும்.

இந்த அதி சொகுசு தொடருந்தில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளது.

தொடருந்தின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

‘யாழ் நிலா’ தொடருந்தில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4,000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3,000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளது.

மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த தொடருந்து சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

 

Latest news

Related news