குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள். கேள்வி எழுப்பிய தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் (வீடியோ)

குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? மூன்று வருடங்களாக குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள் என தண்ணிமுறிப்பு கமக்கார அமைப்பின் தலைவர் சௌ.சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (03) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் வனவள திணைக்களத்தின் கீழுள்ளதும், தொல்பொருள் திணைக்களத்தின் கீழுள்ளதுமான பொதுமக்களது நிலங்கள் விடுவிப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போது,

பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறதும், பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள வயல் நிலங்களை விடுவிக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு மேலாக வயல் நிலங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையிலே காணப்படுகின்றது.

குறித்த காணிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு கீழே உள்ளது. குளம் , வயல் நிலங்கள், வீதி அதனை பயன்படுத்துவதற்குரிய அனுமதியும் பெறப்பட வேண்டும் என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

இதன் போது தண்ணிமுறிப்பு விவசாய தலைவர் சசிகுமார் கருத்து தெரிவிக்கையில், இவர்களுக்கு 50 ஏக்கர் காணி குருந்தூர்மலையில் இருக்கிறது. வடக்கு பகுதியில் 28 ஏக்கரும், குருந்தூர் மலையின் சுற்றளவிலுள்ள 78 ஏக்கரினை இவர்கள் எடுத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஐந்து ஏக்கர், இரண்டு ஏக்கர் என எடுத்துக்கொண்டு வருகிறார்கள் மூன்று வருடங்களாக. குளத்தினையும் பிடித்து வைத்திருக்கிறார்கள். 228 ஏக்கர் இவர்களுக்கு என்ன தேவைக்கு?, குளத்திற்குள் கோயில் கட்ட போகிறார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மஸ்தான் தெரிவிக்கையில், வனவள திணைக்களம் தொடர்பானதும், குர்ந்தூர்மலை தொடர்பானதும் பிரச்சினைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி விஷேட கூட்டம் ஒன்றினை போட்டு இதற்குரிய முடிவுகளை எட்டலாம் என தெரிவித்தார்.

Latest news

Related news