தண்ணிமுறிப்பு குளத்தில் இராணுவத்தினர் மணல் அகழ்வு. பொலிஸார் துணை போகின்றனரா? கேள்வி எழுப்பிய பீற்றர் இளஞ்செழியன்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குள பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று ( 05) பிற்பகல் இடம்பெற்ற மணல் அகழ்வு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் , நானும் அவ்விடத்திற்கு கள விஜயம் செய்த போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிந்ததாக தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலை பகுதியில் காவல் கடமையில் நிற்கும் இரு பொலிஸார் குறித்த மண் அகழ்வினை வேடிக்கை பார்த்து நின்றதாகவும்,

இராணுவத்திற்கு ஒரு சட்டமும், மக்களுக்கு இன்னொரு சட்டமுமா? என கேள்வி எழுப்பியுள்ளதோடு பொலிஸாரும் சட்டவிரோத மண் அகழ்விற்கு உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest news

Related news