வெளியாகிய கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் உயிரியல் பிரிவில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் விஜயகுமார் மிதுசன் முதலிடம் பெற்றுள்ளார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04.09) மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் மல்லாவி மத்திய கல்லூரி மாணவன் உயிரியல் பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
இவ் மாணவன் உயிரியல் விஞ்ஞானத்தில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் தேசிய மட்டத்தில் 446 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.