வடமாகாண ரீதியில் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயம் சாதனை

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயம் வடமாகாண ரீதியில் 4 ஆவது இடத்தினை பெற்று பாடசாலைக்கும் வவுனியா தெற்கு வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியானது இம்மாதம் 6,7,8,9,10 ஆகிய திகதிகளில் யாழ்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம் பெற்றிருந்தது. இப் போட்டியில் வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

குறித்த போட்டியில் வாணி வித்தியாலய மாணவர்கள் 17 வயது பெண்கள் பிரிவின் கீழ் இடம்பெற்ற யூடோ 52கிலோ எடை பிரிவில் முதலாம் இடத்தினையும், 16 வயது பெண்கள் பிரிவின் கீழ் இடம்பெற்ற

400m ஓட்டப்போட்டியில் இரண்டாம், நான்காம் இடத்தினையும்,800m ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினையும்,100m ஓட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினையும், 4×100m அஞ்சல் ஓட்டம்=ஐந்தாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமையும் குறிப்பிடதக்கது

Latest news

Related news