உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா பதவி துறப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
நீதிபதி பல்வேறுபட்ட அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என கருதப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜா தொடர்பாக பாராளுமன்றில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.