புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுடன் வாழும் குடும்பத்திற்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினரால் நிரந்தர வீடு கையளிப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுடன் வாழும் குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர வீடு ஒன்று அமைத்து இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காலத்தில் பலர் நிரந்தர வீடு இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனும் கிராமத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற குடும்பம் ஒன்றிற்கு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினரால் நிரந்தர வீடு ஒன்று அமைத்து இன்றையதினம் (28.10.2023) அமைப்பின் செயலாளர் பிரவீன் மற்றும் பாெருளாளர் ஜெஸ்மன் ஆகியோரால் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி உதவியை நெதர்லாந்து தேசத்தில் வாழ்கின்ற சாந்தன் குடும்பம் ( சாந்தன், மரியம், ஏனோக் , நிகுயின்) மற்றும் ஜெசிந்தன் குடும்பம் ( ஜெசிந்தன்,றொஷாணி, ஆதி ) ஆகியோர் வழங்கியுள்ளார்கள். அத்தோடு இது , ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினரின் 107 ஆவது வீடு கையளிக்கும் நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Related news